5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: உ.பி. பொறுப்பில் இருந்து பிரியங்காவை கழட்டி விட்ட காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அஜோய் குமார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Spotlight On Sachin Pilot, Priyanka Gandhi In Congress' Big Reshuffle sgb

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்த பிரியங்கா காந்தி அந்தப் பொறுப்பிலிருந்து கழற்றிவிடப்பட்டு இருக்கிறார்.

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில், தெலுங்கானாவில் மட்டுமே வெற்றி பெற்றது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவிடம் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்தத் தோல்வியை அடுத்து, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து கட்சியில் அமைப்பு ரீதியான பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த பிரியங்கா காந்தி அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபாருக்கான காங்கிரஸ் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சச்சின் பைலட் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும்,  ரமேஷ் சென்னிதலா மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அஜோய் குமார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios