துபாயில் இருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்தது. இதனையடுத்து ஜெயப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 189 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்தியா, துபாய், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி எஸ்.ஜி. 58 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் 189 பயணிகளுடன் இன்று காலை 9 மணிக்கு புறப்பட்டது. அப்போது பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தின் டயர் வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி இது தொடர்பாக ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

 

இதனையடுத்து ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே வந்ததும் அவசரமாக அந்த விமானம் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானியில் சாதுர்யத்தால்  விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 189 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.