Asianet News TamilAsianet News Tamil

மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம் மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 6 வார கால அவகாசம்

Spell Out Stand on Sethusamudram Project Supreme Court Asks Centre
Spell Out Stand on Sethusamudram Project, Supreme Court Asks Centre
Author
First Published Nov 14, 2017, 9:29 AM IST


ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரும் வழக்கில், 6 வாரத்திற்குள் முடிவு எடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.

சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியசாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அதிகமான கால அவகாசம் அளித்தும் மத்திய அரசு முடிவு எடுத்து அறிவிக்கவில்லை என்று சுப்ரமணியசாமி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

6 வாரம் அவகாசம்

இதையடுத்து, ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுத்து 6 வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்படி 6 வார காலத்துக்குள் முடிவு எடுத்து அறிவிக்காவிட்டால், அது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios