கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகே அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் செண்டர் மீடியனை தாண்டி இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் மீது மோதும் பதை பதைக்க வைக்கு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ப்ரீத்தி மனோஜ் என்ற பெண் தூக்கி வீசப்பட்ட படுகாயமடைந்தார். மேலும் எதிர் திசையில் வந்த காரில் இருந்த அமை ஜெயதேவன் என்ற சிறுவனும் காயமடைந்தார்.இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனையும், பெண்ணையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவரை அங்கிருந்தர்வகள் பிடித்து, அடி கொடுத்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதி பெண் தூக்கி வீசப்படும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த விபத்து காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.