Special 2G spectrum allocation case verdict For Stalin

கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்த முக்கிய தலைகள் இன்று டெல்லியில் முகாமிட்டுள்ளன. ராஜாத்தியம்மாள், கனிமொழி, கனிமொழியின் கணவர், அமிர்தம் என்று குடும்ப உறுப்பினர்கள் அங்கே இருக்கின்றனர். இது போக துரைமுருகன், பொன்முடி, ஜெகத்ரட்சகன் என்று அக்கட்சியின் முக்கிய தலைகளும் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் காத்து நிற்கின்றனர். 

இன்று வெளியாகும் 2ஜி வழக்கு தி.மு.க.வினுள் தலையெழுத்தில் என்ன மாதிரியான மாற்றத்தை கொண்டுவரப்போகிறது என்பது புதிராய் உள்ளது. இது குறித்து பெரிதும் கவலைப்பட வேண்டிய கருணாநிதி நல்ல நினைவாற்றல் நிலைக்கு வெளியே சென்று இருப்பதால், ஸ்டாலின் தலையில் மொத்த அழுத்தமும் விழுந்திருக்கிறது. அவர் இந்த தீர்ப்பு என்னாகுமோ? ஏதாகுமோ? எனும் பதைபதைப்பில் இருக்கிறார். 

இந்நிலையில் டெல்லி சென்றுள்ள துரைமுருகன் நொடிக்கு நொடி அங்கு நடக்கும் விஷயங்களை ஸ்டாலினுக்கு அப்டேட் செய்து கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் துரைமுருகனின் உதவியாளர் நிலையிலிருக்கும் ஒரு நபர் மொபைலில் போட்டொ மற்றும் வீடியோ எடுத்து அதை உடனுக்குடன் ஸ்டாலினின் வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். 

ஆக டெல்லியிலிருந்து செயல்தலைவருக்கு ஸ்பெஷல் லைவ் ரிலே நடக்கிறது.