Southern railway introduce premium thatkal service

பிரீமியம் தட்கல் கட்டண சேவையை அறிமுகப்படுத்தியது தெற்கு ரயில்வே …- ஸ்லீப்பர் கிளாஸ் முன்பதிவுக்கு 200 சதவீதம் கூடுதல் கட்டணம்…100 ரயில்களில் முன் அறிவிப்பில்லாமல் பிரீமியம் தட்கல் கட்டண சேவையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்லீப்பர் கிளாஸ் முன்பதிவுக்கு 200 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தினசரி இயக்கப்படும் சுமார் 100 விரைவு ரயில்களில், பிரிமியம் தட்கல் சேவை கட்டணத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இந்த பிரிமியம் தட்கல் முறையில் பதிவு செய்தால், 10 சதவீத இருக்கைகளுக்கு சாதாரண கட்டணத்தைவிட 10 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் - அதற்கடுத்துள்ள 10 சதவீத இருக்கைகளுக்கு மேலும் 20 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் - 200 சதவீதம் ஸ்லீப்பர் கிளாஸ் முன்பதிவு டிக்கெட்டுக்கு கட்டணம் அதிகரிக்கும். 



இரண்டடுக்கு ஏ.சி, மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கு சாதாரண கட்டணத்தைவிட 150 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆன் லைனில் மட்டுமே பிரீமியம் ரயில் முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியும் என்பதும், ரயிலைத் தவறவிட்டு விட்டால் பணம் திரும்பப் பெற முடியாது என்பதும் சாதாரண பயணி களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தட்கல் பதிவுகளுக்கான இடஒதுக்கீடு குறையும். ரயில்வேயின் வருமானத்தை பெருக்குவதற்காக தெற்கு ரயில்வே முன்னறிவிப்பில்லாமல் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.