Southern Railway announces 223 special trains to Sabarimala

உலக பிரசித்தி பெற்ற சபரிமலைக்கு செல்ல 223 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை , ஹைதெராபாத் ,விஜயவாடா , விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு ரயில்களியாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபரி மலையில் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு நேரத்திலும் பூஜைகளுக்காக நடை திறப்பது வழக்கம். ஆனால், முக்கிய பூஜைக் காலமான மண்டல பூஜை நேரத்தில் நெடு நாட்கள் சந்நிதி திறந்து வைக்கப்படும். இக்காலங்களில் பக்தர்கள் அதிகம் வருகிறார்கள். 

இந்த மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ.15 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. வழக்கத்தை விட இந்த ஆண்டு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதப் பிறப்பான முதல் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில் 'மண்டல காலம்' என்று அழைக்கப்படுகிறது. 

நவ.15 துவங்கி, வரும் டிச.26 ஆம் தேதி இரவு 10 மணி வரை இந்த மண்டல பூஜை நடைபெறும். பின்னர் டிச.30 ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 2018 ஜன.20 ஆம் தேதி காலை 7 மணி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

இதற்காக கேரள அரசு போக்குவரத்துக்கழகம் முதற்கட்டமாக 300 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இந்நிலையில், சபரிமலைக்கு செல்ல 223 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை , ஹைதெராபாத் ,விஜயவாடா , விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு ரயில்களியாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.