சீக்கிரமா வருது  தென் மேற்கு பருவமழை…. இன்னும் இரண்டு நாள் பொறுத்திருந்தா போதும்…

வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு இந்தியாவில் தென் மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று  வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அன்படி மே 15 ஆம் தேதி மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை  தொடங்கும். இந்த மழை செப்டம்பர் மாதம்  இறுதி வரை நீடிக்கும் என்பதால்  தமிழகம், கேரளா உள்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் பலன்பெறும்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை வட கிழக்கு  பருவமழை  பெய்யும் எதிர்பார்த்திருந்த நிலையில் இயற்கை வஞ்சித்து விட்டது.

வட கிழக்கு பருவமழை ஏமாற்றியதால் தமிழகத்தில் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வறட்சி நிலவுகிறது.

இதனிடையே நாடு முழுவதும் விவசாயிகள் தென் மேற்கு பருவ மழையை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். பொதுவாக ஒரு ஆண்டின் மழை பொழிவில், 70 சதவீதத்தை தென்மேற்கு பருவ மழை தான் வழங்கி வருவதால் இந்த மழை சீசனை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு விரைவில் தொடங்கும்  என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.  முதலில் அந்தமான் நிகோபார் தீவுகள் கடலில் தான் தென் மேற்கு பருவமழை காலம் துவங்கும்.

அதன் படி மே-15-ல் தென் மேற்கு பருவ மழை துவங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.. பின்னர் கேரளாவில், ஜூன், 1ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது