இன்னும் சில ஆண்டுகளில் இமயமலைப் பகுதியில் 8.5 அளவில் நிலநடுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் புவியியல் வல்லுனராக இருக்கும் சிபி ராஜேந்திரன் தெரிவிக்கும் போது, இமயமலையின் மத்தியப் பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 8.5 அல்லது அதற்கும் அதிகமாக அளவில்  நிலநடுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு முன், ஏற்கனவே நேபாளம் மற்றும் சர்காலியா ஆகிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் இமய மலை மத்தியபகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் என தெரிவித்து  உள்ளனர்.

இதனை மேலும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளது கூகுள் எர்த் மற்றும் இஸ்ரோவின் கார்டோசாட் 1 செயற்கைக் கோள் ஆய்வு. இந்த நிலநடுக்கம் ஏற்படும் போது, 600 கிமீ தூரம் வரையில் பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 இவ்வாறு ஏற்படும் நிலநடுக்கத்தின் போது இமயமலை நேபாளம் – இந்திய எல்லைப் பகுதியில் 15 மீட்டர் தூரம் வரை சரியவும் வாய்ப்புள்ளதாக என  ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது