Sonia set up group plan to select presidential candidate

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குழு ஒன்றை அமைத்துள்ளார்.

ஜூன் மாதம் 24 தேதியுடன் பிரணாப்முகர்ஜியின் 5 ஆண்டுகால குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. இதனையொட்டி வெகு விரைவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் வைரவிழா நிகழ்வில் எதிர் கட்சி தேசிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போதும் ஜனாதிபதி தேர்விற்கு யாரை நிறுத்துவது என்ற கேள்வி வந்த போது, காங்கிரஸ் கட்சி தரப்பில் பேதமில்லாமல் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து நிற்க வைப்பபோம் என்று கூறியிருந்தனர்.

இதுகுறித்து சில நாட்கள் முன்பு டெல்லியில் ஆலோசனை நடந்தது. பாஜக தனது வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பு எதிர்கட்சிகள் சார்பில் யாரை நிறுத்தலாம் என்று முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே தற்போது ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாம் என்று பாஜக எம்எல் ஏக்கள் ஒருமனதாக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சி சார்பில் யாரை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்கவைப்பது என்பதை தேர்வு செய்ய காங்கிரஸ் தரப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.