Asianet News TamilAsianet News Tamil

Congress Presiden Election: காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: சோனியா, பிரியங்கா வாக்களிப்பு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. தலைவர் சோனியா காந்தி,  பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர்.

Sonia Gandhi votes in the Cong Prez election
Author
First Published Oct 17, 2022, 12:34 PM IST

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. தலைவர் சோனியா காந்தி,  பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர்.

தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் வாக்களிக்க உள்ளனர். ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாக்காளர் அறையில் வாக்களிக்க உள்ளார். 

காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கர்நாடகாவில் இருக்கும் ராகுல் காந்தி எப்படி வாக்களிப்பார்? சர்ச்சையில் காங்கிரஸ்!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 23 ஆண்டுகளுக்குப்பின் நடக்கிறது. கடந்த 1997ம் ஆண்டு தேர்தல் நடந்தபின் அதன்பின் இப்போதுதான் நடக்கிறது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மறைமுக ஆதரவுடன் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரும் போட்டியிடுகிறார்கள். வரும் 19ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். 

புதிய தலைவரைத் தேர்தந்தெடுக்ககாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாக்களித்து தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஆகியோர் சென்று வாக்களித்தனர்.
அப்போது சோனியா காந்தி நிருபர்களிடம் கூறுகையில்” இதற்காகத்தான் நீண்டகாலம் காத்திருந்தேன்” எனத் தெரிவித்தார்

காங்கிரஸ் தேர்தலில் இருந்து சசி தரூரை விலகச் சொல்லுங்க! ராகுல் காந்திக்கு நெருக்கடியா? விவரம் என்ன?

கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் உள்ள ராகுல் காந்தியும் வாக்களிக்கஉள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ்நிர்வாகிகள் வாக்களிக்க கன்டெய்னர் ஒன்றை வாக்களிப்பு அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.

அதில் ராகுல் காந்தி வாக்களிக்க உள்ளார்.  தலைவர் பதவி வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கேவும் கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் வாக்களிக்க உள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுள்ள 40 காங்கிரஸ் நிர்வாகிகளும், பிரத்யேக வாக்களிப்பு அறையில் வாக்குப்பதிவுசெய்கிறார்கள்.

கேரள மாநிலத்தில் 310 காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். மாநிலத் தலைவர் கே.சுதாகரன், வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.முரளிதரன் ஆகியோர் வாக்களிக்க உள்ளனர். இன்றுகாலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிவரை நடக்கிறது. வரும் 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றை முடிவு அறிவிக்கப்படுகிறது.

சென்னையில் தமிழக காங்கிரஸ் சார்பில் 711 நிர்வாகிகள் வாக்களிக்கஉள்ளனர். ஒரே நேரத்தில் 4 பேர் வாக்களிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்களிக்க வருவோர் அடையாள அட்டை, உறுப்பினர் அட்டை பரிசோதிக்கப்பட்டபின் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

காங்கிரஸ் தேர்தல்: கடைசி நேர மாற்றம்! மல்லிகார்ஜுன கார்கே போட்டி: திக்விஜய் சிங் இல்லை?

காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் “ காங்கிரஸ் தலைவர் தேர்தல் சுதந்திரமாக, நேர்மையாக, வெளிப்படையாக நடக்கிறது. தலைவர் பதவிக்கு தேர்தலை காங்கிரஸ் கட்சி மட்டுமே நடத்துகிறது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகத்தைச் சேர்ந்த டிஎன் சேஷன் போன்று மத்திய தேர்தல் அதிகாரியாக மதுசூதன் மிஸ்திரி இருந்து தேர்தலை நடத்துகிறார். 137 ஆண்டு காங்கிரஸ் வரலாற்றில் 6 முறை தலைவர் தேர்தலுக்கு தேர்தல் நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios