ராகுலின் பாதயாத்திரையில் பங்கேற்க மைசூர் வந்தார் சோனியா காந்தி... கர்நாடக காங். தலைவர் வரவேற்பு!!

மைசூர் வந்த சோனியா காந்திக்கு விமான நிலையத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உற்சாக வரவேற்பு அளித்தார். 

sonia gandhi came to mysore to participate in rahuls padayatra and karnataka cong president welcomes her

மைசூர் வந்த சோனியா காந்திக்கு விமான நிலையத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உற்சாக வரவேற்பு அளித்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,600 கிலோ மீட்டர் தூரம் ராகுல்காந்தி பாதயாத்திரை செல்ல திட்டமிட்டார். அதன்படி, கடந்த செப்.7 ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் பாதயாத்திரையை தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த 30 ஆம் தேதி கர்நாடகாவை சென்றடைந்தது. ராகுல்காந்திக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: பொறியியல் மாணவனுக்கு சேர்ந்த பரிதாபம்.. 11 வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழப்பு..

கா்நாடகாவில் 2 நாட்கள் பாதயாத்திரையை முடித்த ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தாண்டவபுரா கிராமத்தில் தங்கினார். இதையடுத்து பதனவாலு கிராமத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி, நேற்று மாலை மைசூரு நகருக்குள் நுழைந்தார். மைசூருவில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று இரவு 7 மணிக்கு பாதயாத்திரையை நிறைவு செய்த ராகுல்காந்தி, தசரா கண்காட்சி பகுதியில் ஓய்வெடுத்தார். இன்று (அக்.03) காலை மைசூருவில் இருந்து பாதயாத்திரையை தொடங்கி ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக மண்டியாவுக்கு செல்கிறார்.

இதையும் படிங்க: 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !

இந்த பாதயாத்திரையில் ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மைசூர் வந்த சோனியா காந்திக்கு விமான நிலையத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உற்சாக வரவேற்பு அளித்தார். வருகிற வியாழக்கிழமை அவர் ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்குகொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி சமீபமாக கட்சி நிகழ்வுகளில் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios