காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்தனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்தனர்.

ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ நடைபயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைக் கடந்த இன்று காலை டெல்லி நகருக்குள் வந்துள்ளது.

ஆர்எஸ்எஸ்,பாஜக வெறுப்பை பரப்புகின்றன:ராகுல் காந்தி தாக்கு!டெல்லி வந்த பாரத் ஜோடோ யாத்திரை

ஹரியானாவில் நடைபயணத்தை முடித்து, டெல்லிக்குள் இன்று காலை பதார்பூர் எல்லைக்கு வந்த ராகுல் காந்தியை, டெல்லி காங்கிரஸ் தொண்டர்கள், மாநிலத் தலைவர் அனில் சவுத்ரி ஆகியோர் பதார்பூர் எல்லையில் வரவேற்றனர். ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜேவாலா, சக்திசின் கோகில், ஆகியோர் ராகுலுடன் வந்திருந்தனர்.

டெல்லியில் ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துக்கள் மற்ற கட்சிகளின் தலைவர்களும், எம்.பி.க்களும், எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். 

இதன்படி டெல்லியில் இன்று நடக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து ஏராளமான தலைவர்கள் ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரின் கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து அவருடன் நடைபயணத்தில் இணைந்தனர்.

டெல்லியில் நாளை ராகுல் காந்தி யாத்திரை… கமல்ஹாசன் பங்கேற்பதாக அறிவிப்பு!!

இன்று அதிகாலை 5.50 மணிக்கு டெல்லை எல்லையான பர்தார்பூர் பகுதியை ராகுல் காந்தி அடைந்து, காலை 10.30 மணிக்கு டெல்லியின் ஆஷ்ரம் பகுதியை அடைந்தார். அங்கு குழுமியிருந்த ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Scroll to load tweet…

பின்னர் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கி, மதுரா சாலை, இந்தியா கேட், ஐடிஓ சென்று, செங்கோட்டை அருகே ஓய்வெடுப்பார்கள். பின்னர் யாத்திரை 2023, ஜனவரி 3ம் தேதி மீண்டும் உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர் செல்லும்.