முன்னாள் மத்திய அமைச்சரும் அமேதி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஸ்மிருதி ரானியின் உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்து வந்தது உத்தரபிரதேச மாநிலம் அமேதி. இந்த தொகுதியில் 2014-ம் ஆண்டு முதல் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ரானி வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றிக்கு அவரது உதவியாளர் சுரேந்திர சிங் பக்கபலமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் ராகுல்காந்தியை அவமானம் படுத்தும் வகையில் வாக்காளர்களுக்கு காலணி விநியோகிக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் முக்கிய நபராக பார்க்கப்பட்டார். இந்நிலையில் அமேதியில் உள்ள பாராலியா கிராமத்தில் சுரேந்திர சிங் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த அவரை அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். குண்டு பாய்ந்த சுரேந்திர சிங் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் அமேதியில் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி சுரேந்தர் சிங் உடலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவர் கொல்லப்பட்ட பாஜக நிர்வாகியின் உடலை தன்னுடை தோளில் சுமந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.