Asianet News TamilAsianet News Tamil

மத்திய அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கு... முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.

Smriti Irani aide murder... Main accused arrest
Author
Uttar Pradesh, First Published Jun 1, 2019, 12:39 PM IST

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். 

காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்து வந்தது உத்தரபிரதேச மாநிலம் அமேதி. இந்த தொகுதியில் 2014-ம் ஆண்டு முதல் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ரானி வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றிக்கு அவரது உதவியாளர் சுரேந்திர சிங் பக்கபலமாக இருந்ததாக கூறப்படுகிறது. Smriti Irani aide murder... Main accused arrest

மேலும் ராகுல்காந்தியை அவமானம் படுத்தும் வகையில் வாக்காளர்களுக்கு காலணி விநியோகிக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் முக்கிய நபராக பார்க்கப்பட்டார். இந்நிலையில் அமேதியில் உள்ள பாராலியா கிராமத்தில் கடந்த 25-ம் தேதி சுரேந்திர சிங் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த அவரை அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். Smriti Irani aide murder... Main accused arrest

இந்நிலையில் உள்ளூர் காங்கிரஸ் தலைவரான ராம்சந்திரா தர்மநாத், நசீம் மற்றும் கோலு ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இதனிடையே முக்கிய குற்றவாளியான வாஸிம் என்பவரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். குண்டடிபட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இக்கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios