ஜிஎஸ்டியால் பெரிய வணிகர்களுக்கு  எந்த பிரச்சினையும் இல்லை என்றும்,  சிறு குறு வணிகர்கள் தான் துன்பப்படுகிறார்கள் என்றும் தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி,  பாஜக அரசு அவசர அவசரமாக ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்ய வேண்டாம் என்று எவ்வளவோ வலியுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை  என குற்றம்சாட்டினார்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில்  நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய  காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி , மக்களவையில் பிரதமர் மோடி இருந்த போதே ,விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச தாங்கள் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

ஆனால் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை என்றும், பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.

கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுதும் செயல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியால் பெரிய வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆனால் சிறிய வணிகர்களுக்கு பெரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ராகுல் தெரிவித்தார்.