சிக்கிம் அரசியலில் மற்றொரு மகுடம்: எலைட் கிளப்பில் இணைந்த சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா!
சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்சா கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைவதால், அம்மாநிலங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் மட்டும் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, அருணாச்சலில் பாஜ மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்சா கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் பிரேம் சிங் தமாங் மீண்டும் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், சிக்கிம் அரசியலுக்கு மற்றொரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அம்மாநிலத்தின் 32 சட்டமன்றத் தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக ஒரு கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அந்த சாதனையை படைத்து எலைட் கிளப்பில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி இணைந்துள்ளது.
கடந்த காலங்களில், சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சி 30 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை வென்ற ஐந்து நிகழ்வுகள் நடந்துள்ளன. அதன்படி, 1989 இல், நர் பகதூர் பண்டாரி தலைமையிலான சிக்கிம் சங்க்ராம் பரிஷத், மாநில சட்டமன்றத்தில் உள்ள 32 இடங்களிலும் வெற்றி பெற்று வரலாற்று சாதானை படைத்தது.
அதன்பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு, 2009ஆம் ஆண்டில், பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி, இந்த சாதனையை மீண்டும் படைத்தது. அக்கட்சி மாநிலத்தின் அனைத்து 32 இடங்களையும் கைப்பற்றியது.
அதற்கு முந்தைய தேர்தல்களை பார்த்தால், 197ஆம் ஆண்டில் காசி லெந்துப் டோர்ஜியின் தலைமையில் சிக்கிம் தேசிய காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி பெற்று டோர்ஜி முதலமைச்சரானார். 2004ஆம் ஆண்டில் பவன் குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி மீண்டும் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது. அக்கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்றது.
தாமரை தமிழ்நாட்டில் மலர இடமே இல்லை: திருமாவளவன் திட்டவட்டம்!
1985 தேர்தலில் சிக்கிம் சங்க்ராம் பரிஷத், அதன் தலைமையில் நர் பகதூர் பண்டாரி 30 இடங்களை வென்றது. நர் பகதூர் பண்டாரி முதல்வரானார். அதன் தொடர்ச்சியாக, 31 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சாதனை படைத்துள்ளது.
இந்த அமோக வெற்றிகளுக்கு கட்சித் தலைவர்களின் புகழ், அவர்களின் பிரச்சார உத்திகளின் செயல்திறன், வாக்காளர்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம். ஒப்பீட்டளவில் சிறிய மக்கள்தொகை மற்றும் அதன் சமூகங்களின் நெருங்கிய இயல்பு ஆகியவை தேர்தல்களின் போது ஒரு கட்சிக்கு பெரும் ஆதரவை சிக்கிம் மக்கள் வழங்குவதற்கு காரணமாக இருக்கலாம்.
சிக்கிம் இதுபோன்ற வெற்றிகளை தொடர்ந்து கண்டு வருவதால், நல்லாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அனைத்து குடிமக்களின் நல்வாழ்வு ஆகியவற்றில் ஆளும் கட்சியின் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. அதேசமயம், அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதிலும், மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதிலும் ஆக்கபூர்வமான பங்கை எதிர்க்கட்சிகள் அளிக்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.