ஜொமோட்டோவில் ஆர்டர் செய்த காபியில் சிக்கன் பீஸ் இருந்ததாக வாடிக்கையாளர் டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், இதற்க்கு காபி நிர்வாகம் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபியில் சிக்கன் துண்டா?
ஓட்டலில் இருந்து உணவுகளை வாங்கி சாப்பிடும் போது பெரும்பாலும் பல்லி, கரப்பான் பூச்சி உள்ளதாக புகார் கூற கேள்விபட்டிருப்போம்,ஆனால் ஜொமோட்டாவில் ஆர்டர் செய்த காபியில் சிக்கன் துண்டு இருந்ததாக வாடிக்கையாளர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த சௌரப் என்ற நபர், Zomato மூலம் காபி ஆர்டர் செய்துள்ளார். அந்த காபி வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்ட நிலையில் அதனை தனது மனைவியோடு சேர்ந்து சௌரப் அருந்தியுள்ளார். அப்போது காபியில் ஏதோ ஒன்று தட்டுப்பட எடுத்துப்பார்த்துள்ளார். சிக்கன் பீஸ் போல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த சௌரப் உடனே காபியோடு அருகில் சிக்கன் துண்டு போன்ற மர்ம பொருளை வைத்து புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் third wave cofee-ல் இருந்து காபி ஆர்டர் செய்தேன் அதில் சிக்கன் துண்டு இருந்தது வேதனை அளிப்பதாக பகிர்ந்திருந்தார்.

அதிர்ச்சி அளித்த காபி நிறுவனம்
இந்த பதிவால் அதிர்ச்சி அடைந்த third wave cofee நிறுவனம், விளக்கம் அளித்துள்ளது அதில் தங்களது வாடிக்கையாளர் Pina colada mocha ஆர்டர் செய்ததாக கூறியுள்ளது. சிக்கன் துண்டு இருந்ததாக கூறிய இந்த சம்பவம் மிகப்பெரிய பிரச்சனையாகத் தோன்றியதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதில் எந்த வித தவறும் நடைபெறவில்லையென கூறியுள்ளது. காபியில் அன்னாசிப்பழத்துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும் அதனை சௌரப் சிக்கன் என்று தவறாகக் கருதியாக தெரிவித்துள்ளது. மேலும் இது ஒரு சுவையான பானமாகும் என்றும் அன்னாசி துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அலங்கார பொருளாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பழம் முற்றிலும் உண்ணக்கூடியது என்றும் துரதிர்ஷ்டவசமாக, இது வேறொன்றாகக் வாடிக்கையாளரால் கருதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காபியில் விசித்திரமான பொருள் இருந்தது மோசமான அனுபவமாக இருந்தாக சௌரப் தெரிவித்துள்ளார். இருந்த போதும் இந்த பிரச்சனையை மேற்கொண்டு கொண்டு செல்ல விரும்பவில்லையென கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
