ஐஐடியில் இரவு முழுவதும் ஒரே அறையில் மாணவன், மாணவி இருப்பதாக வந்த தகவலையடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா கிருஷ்ணா மாவட்டம் நூஜி வீடு நகரில் அரசு ஐஐடி உள்ளது. இங்கு சுமார் 6000 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பூட்டப்பட்ட ஐஐடி மாணவியர் விடுதியில் உள்ள ஒரு அறையில் மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் மாலை முதல் பதில் இருப்பதால் நேற்று காலை பேராசிரியருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பேராசிரியர்கள் பாதுகாவலர்களுடன் நேற்று காலை அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த விடுதி அறை பூட்டி போடப்பட்டு இருந்தது. இருப்பினும் சந்தேகமடைந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு பி.டெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இருந்தது தெரியவந்தது. இருப்பினும் அந்த அறை முழுவதும் சோதனை செய்தபோது அங்கு கட்டிலுக்கு அடியில் மாணவன் ஒருவன் இருந்ததும் தெரியவந்தது.

வெளியே பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு அவர் கட்டிலுக்கு அடியில் பதுங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவன் மட்டும் மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக இருவரிடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரும் அந்த அறைக்குள் வந்தது எப்படி? வெளியே பூட்டி சென்றது யார்? இருவரும் காதலித்து வந்தார்களா? என விசாரித்து வருகின்றனர்.