மகாராஷ்டிராவில் கிழக்கு அந்தேரி இடைத் தேர்தலில் தங்களுக்கு சூலாயுதம், எரியும் விளக்கு அல்லது உதய சூரியன் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் சிவசேனா கட்சி கோரியுள்ளது.

மகாராஷ்டிராவில் கிழக்கு அந்தேரி இடைத் தேர்தலில் தங்களுக்கு சூலாயுதம், எரியும் விளக்கு அல்லது உதய சூரியன் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் சிவசேனா கட்சி கோரியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சிவசேனா என்ற பெயருக்குப் பதிலாக பல்வேறு பெயர்கள் கொண்ட பட்டியலையும் தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவேசனா அளித்துள்ளது.

சிவசேனா கட்சியிலிருந்து போட்டியாகச் செயல்பட்டு பிரிந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவினர் தேர்தல் ஆணையத்திடம் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கோரினர். இதனால் வில் அம்பு சின்னத்தையும், கட்சிப் பெயரையும் தங்களுக்கு ஒப்படைக்கக் கோரினர்.

குட்டி பகை! தந்தை நட்பு! பிரதமர் மோடியை வாழ்த்தி வியப்பில் ஆழ்த்திய முலாயம் சிங்

இதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையிலான குழுவினரும் தங்களுக்குத்தான் சிவசேனா பெயர்சொந்தம், விம்அம்பு சின்னமும் தங்களுக்கானது என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.
இதையடுத்து, வில் அம்பு சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.

அதுமட்டுமல்லாமல் திங்கள்கிழமைக்குள் கட்சிக்கான 3 வெவ்வேறு பெயர்களையும், சின்னங்களையும் வழங்குமாரு இருதரப்பினரையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்களிடம் காணொலியில் நேற்று பேசுகையில் “ சிவசேனா பாலசாஹேப் தாக்கரே, சிவசேனா பாலசாஹேப் பிரபோத்தனகர் தாக்கரே, மற்றும் சிவசேனா உத்தவ் பாலசாஹேப் தாக்கரே ஆகிய பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளோம்.

எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் போர் வீரர் முலாயம் சிங் : பிரதமர் மோடி புகழாஞ்சலி

அதேபோல எரியும் விளக்கு, சூலாயுதம் மற்றும் உதய சூரியன் சின்னம் ஆகிய3 சின்னங்களில் ஒரு சின்னத்தை ஒதுக்கவும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம்.இந்த 3சின்னங்களில் ஒன்றுடன், இதில் ஏதாவது ஒரு பெயருடன் இடைத் தேர்தலில் நாம் களமிறங்குவோம்.

தேர்தல் ஆணையம் விரைவாக சின்னத்தையும், கட்சியின் பெயரையும் முடிவு செய்து அறிவிக்க நான் கேட்டுள்ளேன். ஏனென்றால் நாங்கள் மக்களைச் சந்தித்து இடைத் தேர்தலில் வாக்குச் சேகரிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றாலும், என் நம்பிக்கை குலையவில்லை, சேனா தொண்டர்கள் மீதான நம்பிக்கை இன்னும் குறையவில்லை” எனத் தெரிவித்தார்

குஜராத் தேர்தலில் மீண்டும் எதிரொலிக்கும் சாதி: பிரதமர் மோடியை அவமதித்த ஆம் ஆத்மி தலைவர்

மும்பையின் புறநகரான கிழக்கு அந்தேரி சட்டப்பேரைவக்கு இடைத் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடக்க உள்ளது. இதில் சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே மனை ருஜ்தா லட்காவும், பாஜக சார்பில் முர்ஜி படேலும் களமிறங்குகிறார்கள்.