shiv sena angry speech about pakistan

இந்தியா மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு சம்மன் அனுப்புவது வெட்கக்கேடானது என்றும், அவர்களை நசுக்கி எறிய வேண்டும் என்றும் சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் சென்ற வாரம், காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல், 2 இந்திய வீரர்களின் தலையை துண்டித்து, உடலை சிதைத்து வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் , இங்கு நடைபெற்று வரும், பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ. மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவம் தான் காரணம் என நாம் அவர்களுக்கு ஆதாரங்களை அனுப்பி கொண்டு இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் உற்பத்தி செய்யப்படுவதும், காஷ்மீரில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் குறைந்தபாடில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் வங்கிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இந்திய அரசு, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு சம்மனை அனுப்பி வருகிறது. வெட்கக்கேடானது என்ற வார்த்தையை மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்துவது போதாது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் இந்த தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்களை நசுக்க வேண்டும் என்றும் .ஒவ்வொரு இந்தியனின் உயிருக்கும் 50 பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலையை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.