கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று அந்தமான் அருகே கடலில் மூழ்கியது. கொல்கத்தாவில் இருந்து  சுமார் 125 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் மூழ்கியுள்ளது.

கப்பலில் இருந்த 11 ஊழியர்கள், உயிர்காக்கும் கவசங்களை அணிந்து கடலில் குதித்து தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. கப்பல் மூழ்கியது குறித்த தகவல் கிடைத்தவுடன் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்து விரைந்துள்ளனர். 

2 கப்பல்களில் சென்றுள்ள மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலில் மூழ்கிய ஐஐடி பாந்தர் சரக்கு கப்பல் 1985 ஆம்ஆண்டு கட்டப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதாகவும், தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.