கேரளாவில் தொடர் கனமழை காரணமாக, இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 380 கும் மேற்பட்டவர்களை உயிர் பலி வாங்கியது.
கேரளாவில் தொடர் கனமழை காரணமாக, இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 380 கும் மேற்பட்டவர்களை உயிர் பலி வாங்கியது.பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணுக்குள் சரிந்தன. பலர் மாயமாகி உள்ளனர். மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது.
தற்போது வீடு மற்றும் உடைமைகளை இழந்து வாழும், மக்களுக்கு உலகம் முழுவதும் உதவி கரம் நீட்டி வந்தாலும், தனி ஒரு மனிதனாய் அபுதாபி தலைமையகத்தில் உள்ள விவி எஸ் சுகாதார பராமரிப்பு அலுவலகத்தின் தலைவரான கேரளாவை சேர்ந்த ஷாம்ஷீர் வயாலில் 50 கோடி ரூபாயை, தாய் மண் நட்புக்கு கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க செய்துள்ளது.


கேரள மக்களுக்கு இதுவரை எத்தனையோ அமைப்புகள் மற்றும் தனிநபர் என அனைவரும் உதவி கரம் நீட்டி வந்தாலும், ஒரு தனி நபராக இது வரை நன்கொடை அளித்ததில் அதிகபட்ச தொகையான 50 கோடி வழங்கி கேரள மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.
இவருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது
