இந்தியாவின் 29 முக்கிய நகரங்கள், கடுமையான மற்றும் மிக கடுமையான பூகம்ப ஆபத்தில் உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் புதுச்சேரி உள்ளிட்ட 29 முக்கிய நகரங்கள் பூகம்ப ஆபத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்படும் இடங்களாக டெல்லி, பாட்னா, ஸ்ரீநகர், கோஹிமா, புதுச்சேரி, கவுகாத்தி, சிம்லா, கங்டாக், டேராடூன், இம்பால் என 9 மாநிலங்களின் தலைநகரங்கள் உள்ளன.

குறிப்பாக இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான பூகம்ப ஆபத்துகள் இருப்பதாகவும் அந்த மையம் சுட்டிக்காட்டி உள்ளது. 

அதேபோல், இமாச்சல் பிரதேசம், உத்ரகாண்ட், குஜராத்தின் ரான்குட்ச், பீகார் மாநில வடபகுதி, அந்தமான் நிகோபார் தீவுகள் மிகக்கடுமையான பூகம்ப ஆபத்தில் இருக்கும் பகுதிகள் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.