Asianet News TamilAsianet News Tamil

நிதிஷ்குமாருக்கு பாஜக ஆதரவு...!!! - சுஷில்குமார் மோடி அறிவிப்பு...

Senior BJP leader Sushil Kumar Modi has said that BJP is backing Bihar Chief Minister Nitish Kumar.
Senior BJP leader Sushil Kumar Modi has said that BJP is backing Bihar Chief Minister Nitish Kumar.
Author
First Published Jul 26, 2017, 9:44 PM IST


மீண்டும் பீகார் முதல்வராக நிதிஷ்குமாருக்கு பாஜக ஆதரவு தருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. இதில் நிதிஷின் கட்சிக்கு 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சிக்கு 80 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸுக்கு 27 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

இதனிடையே ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது, ஐ.ஆர்.சி.டி.சி. ஹோட்டலுக்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டு இருந்து வருகிறது.

இதுகுறித்த சிபிஐ குற்றப்பத்திரிக்கையில், லாலுவின் மகன் தேஜஸ்வியின் பெயரும் உள்ளதால், அவரைப் பதவிவிலக முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தி வந்தார்.

ஆனால் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த லாலு, தமது மகனை பதவி விலக மாட்டார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடித்தத்தை ஆளுநர் கேசர்நாத் திரிபாதியை சந்தித்து வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

இதைதொடர்ந்து நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்தார். அதற்கு நிதிஷ்குமார் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், மீண்டும் பீகார் முதல்வராக நிதிஷ்குமாருக்கு பாஜக ஆதரவு தருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் பாஜகவும் அங்கம் வகிக்கும் எனவும், பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து பீகாரில் ஆட்சி அமைப்போம் எனவும் சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios