புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் படிப்பு செலவை நானே ஏற்கிறேன் என  வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தற்கொலை படை தாக்குதலின் போது 40 இந்திய ராணுவ வீரர்கள் கொடூரமாக பலியானார்கள்.  

இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் நிதியுதவியையும் அரசு வேலையையும் வாரி வழங்குகின்றன. 

இந்நிலையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில்; "உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ஷேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இரானி கோப்பையை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையை, தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பாசல் அறிவித்து இருக்கிறார்.