இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றமா இல்லையா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. சட்டப்பிரிவு 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது. இக்குற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டம் 377 வகை செய்கிறது. வெளிநாடுகளில் ஓரின சேர்க்கையை ஆதரித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. 

ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர் உடல் ரீதியான உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ல் கூறப்பட்டுள்ளது. இப்பிரிவு சட்டப்படி செல்லாது என்று கடந்த 2009-ல் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இந்தியாவிலும் இதனை சட்டரீதியாக அனுமதிக்க வேண்டும் என்று கோரி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

 இந்த மனுக்கள் மீதான விசாரணை காரசாரமாக நடந்து வந்தது ஆனால், இந்திய அரசியல் சாசனத்தின் 377வது பிரிவு ஓரினச்சேர்க்கையை குற்றச்செயலாக வரையறுத்து, அதற்கு சிறை தண்டனை வழங்கவும் வழி வகுத்துள்ளது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஓரின சேர்க்கையாளர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் உள்ளது என்றும், இதுதொடர்பாக அதிகளவில் மிரட்டல்களை சந்திக்கவேண்டி உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்திய அரசியல் சட்டம் 377வது பிரிவு ஓரினச் சேர்க்கையை தடை செய்கிறது. அந்தப் பிரிவை நீக்க வலியுறுத்தி தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூலை 17ம் தேதி இறுதி விசாரணை முடிந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், ஏ.எம்.கான்வில்கார், சந்திராசவுத், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்சில், தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள், தற்போதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல’’என கூறினர்.