Asianet News TamilAsianet News Tamil

4 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றால் அதிர்ச்சி... அதிரடியாக மூடப்பட்ட தலைமை செயலகம்..!

அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தலைமை செயலகம் அதிரடியாக மூடப்பட்டது.

secretariat covered by coronavirus for 4 officers
Author
Mumbai, First Published Apr 29, 2020, 12:09 PM IST

அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தலைமை செயலகம் அதிரடியாக மூடப்பட்டது. 

உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  நாட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.  இதனால், கொரோனா பரவல் அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

secretariat covered by coronavirus for 4 officers

நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 9,318 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  ஒரு நாளில் 31 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 369ல் இருந்து 400 ஆக இன்று உயர்ந்து உள்ளது.  1,388 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாநில தலைநகர் மும்பையில் கொரோனா சமூக பரவலை அடைந்து, போலீசார், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. இந்த மாநகரில் மட்டும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தொட்டு உள்ளது.secretariat covered by coronavirus for 4 officers
 
இந்தநிலையில் மும்பையில் ‘மந்திராலயா’என அழைக்கப்படும் மாநில அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றிய 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். secretariat covered by coronavirus for 4 officers

இங்கு முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து அலுவலக பணியாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மாநில தலைமை செயலகம் நேற்று முதல் 2 நாட்கள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை செயலக கட்டிடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios