மக்களவை தேர்தலின் மூலம் ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் பிரதமர் மோடி தூக்கி எறியப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலின் மூலம் ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் பிரதமர் மோடி தூக்கி எறியப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் நக்ரக்கட்டா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று உரையாற்றினார். பிரதமர் மோடி தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் நான்கரை ஆண்டு காலத்தை வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றே கழித்துவிட்டார். 

விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களின் பிரச்சனைகளை கவனிக்க அவருக்கு நேரம் இருந்தது இல்லை என குற்றம்சாட்டினார். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் தூக்கி வீசுங்கள். தேர்தல் நெருங்குவதால் இப்போது உங்கள் வீட்டின் கதவை ஓட்டுக்காக தட்டும் அவர், வாய்க்கு வந்த பொய்களை எல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார். 

ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார். பொய் பேசுவதற்கு ஒரு போட்டி வைத்தால் மோடிக்குதான் முதல் பரிசு கிடைக்கும். இந்த தேர்தலிலும் பொய் பேசாதவாறு மோடியின் வாயை ஒட்ட வேண்டும் என்றும் கடுமையாக விமர்சித்தார்.