scotland police arrested mallya

இந்தியாவில் 9000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி ஒன்பதுக்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு தொப்பியை போட்டு மொத்தமாக ஆட்டையை போட்டவர் மல்லையா.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான இவர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு கிங்பிஷர் மதுபானம் மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றை நடத்தி வந்தார்.

உல்லாச பேர்வழியான மல்லையா குஜால் மஜால் வேலைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தியதால் பெரும் கடனுக்கு ஆளாகி பிசினசை கோட்டை விட்டு விட்டார்.

வர்த்தக சாம்ராஜ்யத்தின் உச்சத்தில் இருந்த மல்லையா நடு ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டது அவர் நடத்திய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான்.

அந்த நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத அளவுக்கு நாறிப்போனது மல்லையாவின் பொழப்பு.

இந்நிலையில் ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட 9 வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.9000 கோடியை தாண்டியது.

அதை திருப்பி கொடுக்க முடியாமல் டிமிக்கி கொடுத்து வந்த மல்லையாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடன் கொடுத்த தேசிய வங்கிகள் அனைத்தும் அவர் மீது வழக்கு தொடுத்திருந்ததால் லண்டனுக்கு தப்பியோடி தலைமறைவானார்.

இந்நிலையில் இந்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாக வங்கி கடன் மோசடி தொடர்பாக மல்லையாவின் லண்டன் பங்களாவில் ஸ்காட்லான்ட் யார்டு போலீஸ் அவரை கைது செய்தனர்.

விரைவில் அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்.

பின்னர் இந்திய அரசு கேட்டு கொண்டால் அவர் இந்தியா கொண்டு வரப்படுவார்.

இந்தியாவின்யின் கோரிக்கையை ஏற்று ஸ்காட்லான்ட் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.