Asianet News TamilAsianet News Tamil

1-8 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு... நவ.8லிருந்து புதுச்சேரியில்!!

புதுச்சேரியில் நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

schools reopens in pondicherry on nov 8th
Author
Pondicherry, First Published Oct 27, 2021, 1:14 PM IST

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததால் அனைத்து மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகின. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனிடையே தொடக்கப்பள்ளி திறப்பு குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு சில மாநிலங்களில் தொடக்கப்பள்ளி திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில் புதுச்சேரியில் நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

schools reopens in pondicherry on nov 8th

இதுக்குறித்து அவர் பேசுகையில், வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது என்றும் தெரிவித்தார். மேலும் நகர் பகுதிகளில் 9 மணி முதல் 1 மணி வரையும், கிராமப்புறங்களில் 9:30 முதல் 1 மணி வரையிலும் பள்ளிகள் செயல்படும், மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது. சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்களை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்பலாம். அதேபோல 1 முதல் 8 ஆம் வகுப்புக்கு ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios