பெங்களுருவில் உள்ள 7 பள்ளிகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்ததையடுத்து தொடர்புடைய பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் பள்ளிகளுக்கு வெடிக்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் செயல்பட்டு வரும் டெல்லி பப்ளிக் பள்ளி, வர்தூர், கோபாலன் சர்வதேச பள்ளி, புதிய அகாடெமி பள்ளி, செயின்ட் வின்செண்ட் பால் பள்ளி, இந்திய பப்ளிக் பள்ளி, கோவிந்த்புரா, எபினேசர் சர்வதேச பள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய 7 பள்ளிகளுக்கு இன்று காலை 11 மணியளிவில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

அதில் இது ஒன்றும் ஜோக் இல்லை. மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு உங்கள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக போலீசை கூப்பிடுங்கள். இல்லாவிட்டால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுவர். தாமதம் செய்ய வேண்டாம் .இதற்கு மேல் எல்லாம் உங்கள் கையில் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்த வெடிக்குண்டு செயலிப்பு நிபுணர்கள் பள்ளி வளாகத்தை தீவிரமாக சோதனையிட்டனர் வருகின்றனர். முன்னதாக மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் குழுக்களாக பிரிந்து, சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் இதுவரை நடந்த சோதனையில் வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த மிரட்டல் புரளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக தெரிவித்துள்ள போலீசார் இதுக்குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறினார்.