schools are closed in kashmir border

பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அட்டூழியம்…காஷ்மீர் எல்லையில் மூடப்பட்டு வரும் பள்ளிகள்….

காஷ்மீரின் எல்லை கட்டுபாட்டு பகுதிகளான நவ்ஷேரா மற்றும் மஞ்கோட் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள 85 பள்ளிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் அடிக்கடி அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தால், இந்திய வீரர்கள் மட்டுமின்றி எல்லையோர கிராம மக்களும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே அமலில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய பகுதிகளில் தொடர்ந்து தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இந்திய ராணுவ தரப்பில் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் அச்சம் நிலவி வருவதால் பாதுகாப்பு கருதி 85 பள்ளிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நவ்ஷேரா, மஞ்ச்கோட் செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் பாதுகாப்பு கருதி 85 பள்ளிகள் மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் படிப்பைத் தொரும் வகையில் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 முறை அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், கடந்த 2 நாட்களில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் சுமார் 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.