Asianet News TamilAsianet News Tamil

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்த பள்ளி சிறுமி பலி!

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்த பள்ளி சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

School Girl dead who fell in hot sambar vessel smp
Author
First Published Nov 20, 2023, 3:21 PM IST | Last Updated Nov 20, 2023, 3:21 PM IST

கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டம் சைனமகேரா கிராமத்தில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயதான சிறுமி சூடான கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்ததில் படுகாயடைந்தார். தீக்காயங்களுடன் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சைனமகேரா கிராமத்தில் உள்ள சீனமகேரா அரசுப் பள்ளியில் கடந்த 16ஆம் தேதியன்று மதிய உணவுக்காக தயார் செய்யப்பட்ட சாம்பார் எடுத்து வரப்பட்ட போது, கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தார். பள்ளி வளாகத்தில் தன்னைத் துரத்திக் கொண்டிருந்த சக தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சூடான பெரிய சாம்பார் பாத்திரத்தில் அச்சிறுமி விழுந்தாள்.

இதில், 50% தீக்காயங்களுடன் துடிதுடித்த சிறுமி முதலில் கலபுர்கியில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிறுமி, மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்று சிறுமி உயிரிழந்து விட்டார்.

முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க ஆளுநர் ரவி ஒப்புதல்!

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வட்டார கல்வி அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையின்  அடிப்படையில், அலட்சியமாக செயல்பட்டதாக, சம்பவ தினத்தன்று விடுமுறையில் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை லலாபி நடாப் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜு சவான் ஆகியோர் மறுநாளே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல், பள்ளியின் தலைமை சமையலர் கஸ்தூரிபாய் தாளக்கேரியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios