எஸ்பிஐ வாட்ஸ் அப் சேவை - எப்படி ரிஜிஸ்டர் செய்வது? - முழு விவரம்!
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ் அப் பேங்கிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் உள்ளிட்ட எஸ்பிஐ வங்கிச் சேவைகளை வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், எஸ்பிஐ வங்கியின் வாட்ஸ் அப் சேவை மூலம், ஓய்வூதியம் பெறுவோர் இனி வீட்டில் உட்கார்ந்து கொண்டே வாட்ஸ் அப் மூலம், தங்களது பென்ஷன் சிலிப்புகளை பெறலாம். வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதன் மூலம், பென்ஷன் சிலிப்புகளை ஓய்வூதியம் பெறுவோர் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் வாட்ஸ் அப் சேவையை எப்படி பெறுவது?
நீங்கள் எஸ்பிஐயில் கணக்கு வைத்து, எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் அம்சத்தைப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் எஸ்பிஐ கணக்கை வாட்ஸ்அப் சேவையில் பதிவு செய்து, முதலில் எஸ்எம்எஸ் மூலம் உங்கள் ஒப்புதலை அளிக்க வேண்டும்.
பான் கார்டில் பேரு தப்பா இருக்கா? ஆன்லைனில் ஆதார் eKYC மூலம் ஈசியாக பெயரை மாற்றலாம்!
இந்த புதிய சேவையைப் பெற, வாடிக்கையாளர்கள் 9022690226 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு Hi என்று அனுப்ப வேண்டும். அதன் பிறகு, கணக்கு இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மென்ட் அல்லது பென்ஷன் ஸ்லிப் போன்ற உங்கள் விசாரணை குறித்து உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் பெற விரும்பும் வசதியை தேர்ந்தெடுத்தால், அதுதொடர்பான தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.
எஸ்பிஐ வாட்ஸ் அப் வங்கி சேவை: எப்படி பதிவு செய்வது?
வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்த, முதலில் உங்கள் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். WAREG என உங்களது செல்போனில் டைப் செய்து அதன்பின்னர் இடைவெளி விட்டு உங்களது வங்கிக் கணக்கு எண்ணை டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே எண்ணிலிருந்து இந்த SMS அனுப்பப்பட வேண்டும். பிறகு, உங்கள் செல்போனில் 9022690226 எண்ணைச் சேமிக்கவும். அதன்பின்னர், அந்த எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் Hi என அனுப்பினால், எந்த சேவையை பெற விரும்புகிறீர்கள் என கேட்கப்படும். இதையடுத்து, நீங்கள் பெற விரும்பும் வசதியை தேர்ந்தெடுத்தால், அதுதொடர்பான தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.
எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவை மூலம் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம்; எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகள் மூலம் மினி ஸ்டேட்மென்ட்டை பெற முடியும்; ஓய்வு பெற்ற ஊழியர்கள் வாட்ஸ்அப் சேவையில் பதிவு செய்து தங்களின் பென்ஷன் சிலிப்புகளை பெற முடியும்.