தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா Savukku Shankar! அவர் மீது குண்டர் சட்டம் ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி!
Youtuber சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தயார் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதுறாக பேசிய வழகிலும், கஞ்சா போதைப்பொருள் பதுக்கிய வழக்கிலும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட சைபர் கிரைம் ஐபிசியின் 294(பி), 353, 509 பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. முசிறி துணை எஸ்பி யாஸ்மின் புகாரின் அடிப்படையில் ஐடி 67 சட்டம் மற்றும் பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கிடைக்காமல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து, அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுதன்ஷு துலியா, அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீஸ் அதிகாரிகள் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
குண்டர் சட்டம் ஏன்?
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாததாகவே இருக்கட்டும். ஏன் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். மேலும், காவல்துறையும் மிகக்கடுமையாக நடந்து கொள்ள முடியாது என்றும், ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பது என்பது ஒரு தீவிரச் சட்டம். அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபரா என்றும் கேள்வி எழுப்பினர்.
சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்பு அச்சுறுருத்தலா?
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் ஏன் போடப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
நீதிமன்றம், "அவரது (சங்கரின்) நடத்தையும் மன்னிக்க முடியாதது. ஏன் இடைக்காலப் பாதுகாப்பு வழங்கக் கூடாது?" அப்போது, இந்த வழக்கை தீர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்தைக் கேட்கலாம் என்று நீதிமன்றம் கூறியது. "இந்த விவகாரம் அடுத்த வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்படும்," என்று அது மேலும் கூறியது.
அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு இது தான் காரணம்.! புதிய குண்டை தூக்கிப்போட்ட செல்லூர் ராஜூ