sasitharur workers attack women reporter
ஐ.நா வேலையை விட்டுவிட்டு இந்தியாவந்தவுடன் காங்கிரஸ் எம்.பி ஆனவர் சசி தரூர். பதவி போதையால், மமதையின் உச்சிக்கே சென்றவர் தான் இந்த சசி தரூர்
எம்பி ஆன நாள் முதல் மத்திய அமைச்சராக இருந்தது வரை இவர் எந்த பத்திரிக்கையாளரையும் மதித்ததே கிடையாது.அத்தகைய குணம் கொண்ட சசி தரூர் தற்போது பெங்களூருவில் டெஸ்கோவில் இன்று நடந்த நிகழ்ச்சியின் போது, குண்டர்களை வைத்து பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தவளை தன் வாயால் கெடும் என்பதற்கேற்ப, வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி கொட்டி, தொடர் சர்ச்சையில் சிக்கி கொள்வது சசி தரூருக்கு வழக்கமான ஒன்றாகும்
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மன்மோகன் அரசின் உத்தரவுகளை அடிக்கடி விமர்சித்து சர்ச்சையில் சிக்கியவர் இவர்,
சொந்த கட்சிக்கே சூன்யம் வைப்பது போல், அவர் பல தில்லாலங்கடி வேலைகளை செய்துள்ளார். கொச்சி கிரிக்கெட் அணி மோசடி புகாரில் சிக்கி தனது பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தனது 3 ஆவது மனைவியான சுனந்தா புஷ்கர் மரண விவகாரத்தில், இதுவரை அவிழ்க்கப்படாத ஏராளமான மர்ம முடிச்சுகள் உள்ளன. ஏற்கனவே சுனந்தாவின் மரணம் தொடர்பாக சசி தரூர் மீது பலச் சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டுள்ளது
இந்நிலையில், பெண்களை அவமதிக்கும் வகையிலும் பெண் இனத்தை இழிவு படுத்தும் வகையிலும், பெங்களூருவில் நடைபெற்ற TESCO நிகழ்ச்சியில்,பெண் பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பத்திரிக்கையாளர் மற்றும் பொதுமக்களிடேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சசி தரூர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சிக்கு வந்த ASIANET NEWSABLE ஊடகத்தை சேர்ந்த பெண் நிருபரான ரோஷிணி ஜேகப் , சசி தரூரிடம் பேட்டி எடுக்க அனுமதி கேட்டுள்ளார்
அப்போது, மனித தன்மையை மறந்து ஏதோ ஒரு சுய காரணத்திற்காக, பெண் பத்திரிக்கையாளர் என்றும் பாராமல் அங்குள்ள செக்யூரிட்டி கார்ட்கள் எனப்படும் தனியார் நிறுவன பாதுகாவலர்களிடம், அந்த பெண் பத்திரிக்கயாளர் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

சசி தரூரின் உத்தரவை தொடர்ந்து சுமார் எட்டு பாதுகாவலர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்து பெண் நிருபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், தனது ஆடை கிழிந்த நிலையில் அந்த இடத்தை விட்டு வெளிவந்ததாக அப்பெண் நிருபர் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் அடைந்துள்ள அந்த பெண் நிருபர் பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதை அடுத்து, நடந்த நிகழ்வு குறித்து, பத்திரிகையாளர் ரோஷிணி அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டது.
இவ்வளவு களேபரங்கள் தன் கண்முன்னே நடந்தும், தான் கட்டளையிட்ட நபர் இத்தகைய கண்மூடித்தனமான தாக்குதலுக்குக் காரணமாக இருந்தும், அதைக் கண்டும் காணாதது போல், சசி தரூர் அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார்.
ASIANET NEWSABLE ஊடகத்தின் பெண் நிருபரான ரோஷிணி ஜேகப்பிறகு இழைக்கப்பட்ட அநீதிக்கு கர்நாடக மாநில பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
மேலும் சசி தரூரின் இந்த காட்டுமிராண்டி தனமான அநாகரிகமான செயல்பாட்டிற்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது
