sappattu raman nazeer... win in eating competition
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், ஒணம் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில், இளைஞர் ஒருவர் 30 நிமிடங்களில் அரிசி சாதம் சாப்பிட்டு பரிசை அள்ளினார்.
கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது பல்வேறு கிளப்புகள், இளைஞர் சங்கங்கள், அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் சார்பில் ஏராளமான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதில் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டு சாப்பிடும் போட்டி நடைபெறும்.
இதில் பங்கேற்கும் இளைஞர்கள் சிலர் அதிகமான சாப்பாட்டை சாப்பிட்டு உடல் நலக்குறைவில்லாமல் போவதும், சிலர் மிகத்தீவிரமாக பாதிக்கப்படுவதும் நடக்கும். இந்த ஆண்டு அதுபோல் நடந்து விடக்கூடாது என்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்தது.
ஆனால், அதை பொருட்படுத்தாமல், இடுக்கி மாவட்டம், கட்டபணை நகரில் வித்தியாசமாக அரிசி சாதம் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இதன்படி, தனிநபர் ஒருவர் 2.5 அரிசியை வேகவைத்த சாப்பாட்டை, மோர், ஊறுகாய் வைத்து சாப்பிட வேண்டும். இதில் அதிகமான 2.5 கிலோ சாப்பாடு அல்லது அதிகமான சாதம் சாப்பிடும் போட்டியாளருக்கு ரூ.5001 பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு முதலில் ஒரு கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட சாதம் வழங்கப்படும். அதை சாப்பிட்டு முடித்தபின், அவர்கள் கேட்க, கேட்க வேகவைக்கப்பட்ட சாதம் தரப்படும். இதில் 2.5 கிலோ அரிசியில் வேகப்பட்ட சாதத்தை சாப்பிடுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், முதல்கட்டமாக ஒரு கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை சாப்பிடும் முன்பாகவே பலர் முடியாமல் போட்டியில் இருந்து விலகினர். 9 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர்.
இவர்களில் 6 பேர் வௌியேறிய நிலையில், மனு, ஜீவா ஆகிய இருவரும் 2 கிலோ சாதத்தை சாப்பிட்டு முடியாமல் விலகினர். ஆனால், இறுதிவரை சாதத்தைக் கேட்டு சாப்பிட்ட நசீர் என்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இது குறித்து பிரண்ட்ஸ் ஆப் கட்டபண்ணா கிளப்பின் தலைவரும் வழக்கறிஞருமான ஜோஷி மணிமாலா கூறுகையில், “ முதல்சுற்றில் ஏராமானோர் பங்கேற்று விலகினர், இறுதிச்சுற்றில் 9 பேர் மட்டும் கலந்து கொண்டு அதில் 6 பேர் முடியாமல் விலகினர்.
ஆனால், கடைசி வரை சாதத்தை சாப்பிட்ட நசீர் என்பவர் 2.5 கிலோ அரிசி சாதத்தை முழுமையாகச் சாப்பிடாமவிட்டாலும், கடைசி வரை இவர் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு இருந்ததால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு ரூ.5001 பரிசு வழங்கப்பட்டது’’ என்றார்.
