Asianet News TamilAsianet News Tamil

ஒடிசா கடற்கரையில் மோடி 3.0 மணற்சிற்பம்: சுதர்சன் பட்நாயக் அசத்தல்!

மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் பிரதமர் மோடி 3.0 இன் அற்புதமான கலைப்படைப்பை செதுக்கியுள்ளார்

Sand artist sudarshan patnaik created sandart to wish pm modi before oath taking ceremony smp
Author
First Published Jun 9, 2024, 1:05 PM IST | Last Updated Jun 9, 2024, 1:05 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. நரேந்திர மோடி 3ஆவது முறையாக இன்று மாலை பதவியேற்கவுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள இந்த பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. பல கலைஞர்களும் தங்களது திறமையால் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், ஒடிசாவை  சேர்ந்த பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் இணைந்துள்ளார்.

ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர் மோடி 3.0 இன் அற்புதமான மணற்சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ளார். அதில், அபிந்தன மோடி ஜி 3.0 வளர்சியடைந்த பாரம் என கூறப்பட்டுள்ளதுடன், நரேந்திர மோடியின் மணற்சிற்பமும் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த கலைப்படைப்பை பலரும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். பலர் அதன் முன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

 

 

பிரதமரின் தொடர்பான பல மணற்சிற்பங்களை ஏற்கனவே உருவாக்கியுள்ளதால் ஒடிசாவின் மணற் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக்குக்கு அங்கீகாரம் தேவையில்லை. பிரபலமான மணற்சிற்பங்கள் பலவற்றை உருவாக்கி உலக மக்களைன் கவனத்தை ஈர்ப்பவர் அவர். பிரதமர் மோடிகூட அவரது கலைதிறமையை வெகுவாக பாராட்டியுள்ளார்.

நரேந்திர மோடி பதவியேற்பு: திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிப்பு; காங்கிரஸ் பங்கேற்பு!

முன்னதாக, பிரதமர் மோடியின் தேர்தல் வெற்றி, ராமர் கோவில் திறப்பு விழா உள்ளிட்ட பல சமயங்களில் மணல் கலையை உருவாக்கி பிரதமர் மோடிக்கு சுதர்சன் பட்நாயக் அர்ப்பணித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி இன்று மாலை 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். டெல்லி முழுவதும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக ராஷ்டிரபதி பவனைச் சுற்றி மோடியின் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா தொடர்பான புகைப்படங்கள் சாலையோரம் வைக்கப்பட்டு வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios