சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ‘பூச்சி பக்கோடா’ விற்பனை... ரெயில்வே துறையின் சாப்பாடு ‘மானம் கப்பலேறுகிறது’!!

பீகாரில் இருந்து டெல்லி செல்லும் சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி ஆசையாய் வாங்கிச் சாப்பிட்ட பக்கோடாவில் பூச்சி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் டுவிட்டரில் ரெயில்வே அமைச்சகத்திடம் புகார் செய்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ரெயில்வே துறையின் சாப்பாடு குறித்து அறிக்கை அளித்து இருந்தார். அதில், மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற உணவுகள்தான் பயணிகளுக்குரெயில்வே விற்பனை செய்து வருகிறது என்று அதிர்ச்சியான அறிக்கையைவௌியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் ஒரு பயணிக்கு பல்லி பிரியானி வழங்கப்பட்ட நிலையில், இப்போது பூச்சி பக்கோடா பரிமாறப்பட்டுள்ளது.

பீகாரில் இருந்து டெல்லி வரை சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதில் கடந்த 2-ந்தேதி டெல்லியில் இருந்து பீகார் சரன் மாவட்டம்  நோக்கி சென்றரெயிலில் எஸ்-9 பெட்டியில் முகம்மது ஆசாத் என்ற பயணி தனது குடும்பத்துடன் பயணித்தார்.

இந்நிலையில், முகம்மது ஆசாத் ரெயில்வேயின் ‘பேன்ட்ரிகாரில்’ ரூ.30 மதிப்புள்ள ஒரு ‘பக்கோடா’ ஆர்டர் செய்து இருந்தார். அந்த பக்கோடாவை  பிரித்து அவரும் சாப்பிட்டு, அவரின் 4-வயது மகனுக்கும் சிலவற்றை கொடுத்தார். பின்னர் பாக்கெட்டில் உள்ள மீதமிருந்த  பக்கோடாவை எடுத்துப்பார்த்த போது, அதில் பூச்சிகள் இருப்பதைப் பார்த்து முகம்மது அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பயணி முகம்மது அலி கூறியதாவது-

30 ரூபாய்க்கு பக்கோடா வாங்கி சிலவற்றை நானும், எனது 4 வயது மகனும் சாப்பிட்டோம். மீதம் இருந்ததை எடுத்து சாப்பிட்டபோது, ்அதில் பூச்சிகள் இருந்தது பார்த்து அதிர்ந்தேன்.  உடனே சமையல் அறை மேலாளரிடம் கேட்டபோது, அவர் மன்னிப்பு கோரினார்.

இருந்தாலும், நான் ரெயில் அமைச்சகத்தின் டுவிட்டரில் புகார் அளித்தேன். அடுத்தரெயில் நிலையத்தில் என்னை காண அதிகாரிகள் காத்திருந்தனர். அவர்கள் என்னிடம் சில ஆவணத்தில் கையொப்பம் பெற்றுச் சென்றனர்.

மருத்துவர் ஒருவர் என்னையும், என் மகனையும் மருத்துவப்பரிசோதனை செய்து முதலுதவி சிகிச்சை அளித்தார். இந்த சம்பவத்துக்கு பின் பெட்டியில் இருந்த ஒரு பயணி கூட ரெயில்வே சாப்பாட்டை வாங்கி சாப்பிடவில்லை . இவ்வாறு அவர் தெரிவித்தார்.