Asianet News TamilAsianet News Tamil

முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் காங்கிரஸ் அரசியல்: வைரலாகும் சல்மாக் குர்ஷித் வீடியோ!

முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்

Salman Khurshid exposing Muslim Appeasement Politics of Congress watch video smp
Author
First Published Apr 29, 2024, 10:02 AM IST

முஸ்லிம்கள் குறித்து பேசி பிரதமர் மோடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்றார்.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது எனவும் பேசி பிரதமர் மோடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மோடியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் பேசிய பழைய வீடியோக்களை பாஜகவினர் வைரல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் அமெரிக்காவில் உள்ள வாட்சன் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருந்தார்.

அப்போது பேசிய அவர், முஸ்லிம் வாக்குகளால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் மற்றும் இரண்டாம் ஆட்சிகாலங்கள் உருவானதாக கூறினார். முஸ்லிம்களைப் பற்றி காங்கிரஸ் குறிப்பிடும் போதெல்லாம் சிறுபான்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஆனால், முஸ்லிம்களின் வாக்குகளால் காங்கிரஸ் வெற்றி பெற்றது என சல்மான் குர்ஷித் கூறுவதாக பாஜகவினர் கூறுகின்றனர்.

 

 

உண்மையில் சிறுபான்மையினரிடையே முஸ்லிம்கள் முக்கியமானவர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் 1-2 சதவீதம் மட்டுமே உள்ளனர்.  இடஒதுக்கீடு குறித்த காங்கிரஸின் கொள்கைகள் பற்றி பேசிய சல்மான் குர்ஷித், இந்து ஓபிசிகளுக்கு வேலை கிடைத்து வருவதால், முஸ்லிம்களுக்கு தனி ஓபிசி ஒதுக்கீட்டை காங்கிரஸ் விரும்புவதாகவும் கூறினார்.

250 பெண்களின் ஆபாச வீடியோ.. வசமாக சிக்கிய தேவகவுடா பேரன்.. கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா யார்?

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களுக்கு பெருமளவிலான நிதியுதவி வழங்கப்பட்டது, இதன்மூலம் முஸ்லிம்கள் தங்களது மக்கள்தொகையின் காரணமாக இந்த நன்மையைப் பெறுகிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.  இதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து முஸ்லிம்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios