குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஊதியத்தை 3 மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியரசுத் தலைவருக்கு தற்போது மாதம் ரூ. 1,50,000 மும், துணை குடியரசுத் தலைவருக்கு ரூ. 1,25,000 மும் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

7/வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் ஊதியத்தை உயர்த்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பான பட்டியலுக்கு மத்திய அமைச்சரவையும், நாடாளுமன்றமும் ஒப்புதல் வழங்கினால், குடியரசுத் தலைவரின் ஊதியம் 1.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை உயரும் என்றும், துணை குடியரசுத் தலைவரின் ஊதியம் மூன்றரை லட்சம் ரூபாயாக அதிகரிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. இதே போல் மாநில ஆளுநர்களின் ஊதியமும் உயர்த்தப்படும். இறுதியாக கடந்த 2008ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள் ஆகியோரின் ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.