நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை மற்றும் மக்களவை உறுப்பினர்களுக்கு 100 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, எம்.பி. ஒருவரின் அடிப்படை ஊதியம் ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாக உயரப்போகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்ய பாரதிய ஜனதா எம்.பி. யோகி ஆதியானந்த் தலைமையில் ஊதியம் மற்றும் படிகள் இணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமர்பித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறது. இதனால், விரைவில் எம்.பி.களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வௌியாகும்.

இதன்படி, எம்.பி.களுக்கு ஊதிய உயர்வு மட்டுமின்றி, அவர்களின் படிகளும் உயர்த்தப்பட இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், குடியரசுத் தலைவரின் இப்போதுள்ள மாத ஊதியமான ரூ.1.5 லட்சத்தை ரூ. 5 லட்சமாகவும், மாநில ஆளுநரின் ஊதியத்தை ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாகும் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.