Sadhguru’s Brain Surgery : நேற்று புதன்கிழமை, ஆன்மீகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவாவுக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது மூளையில் உயிருக்கு ஆபத்தான இரத்தப்போக்கு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்ததாக கூறப்பட்டது.

சத்குருவுக்கு அந்த அறுவை சிகிச்சை அளித்தபிறகு தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை எதிர்பார்த்ததை விட மேம்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சத்குரு கடந்த நான்கு வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், அதையும் மீறி தான் இந்த மாத தொடக்கத்தில் மஹாசிவராத்திரிக்கு இரவு முழுவதும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

Scroll to load tweet…

மேலும் அவரின் இந்த ஆன்மீக உணர்வைப் பாராட்டி, நடிகை கங்கனா ரனாவத், தனது X பக்கத்தில் அவர் விரைவில் குமணடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதே போல பிரபல நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா கொனிடேலா, இயக்குனர் சேகர் கபூர் மற்றும் நடிகர் ரன்வீர் ஷோரே ஆகியோரும் சத்குரு விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Scroll to load tweet…

திரை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் பல்வேரு துறை சார்ந்த பிரபலங்களும் சத்குரு விரைவில் குணமடைய தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிகிச்சை முடிந்து தான் நலமுடன் இருப்பதாக சத்குருவே பேசும் வீடியோ ஒன்றும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தனக்கு சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!