இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு, பெரிய சாதனை படைக்கப்பட்ட நிலையில், அதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார் சத்குரு.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஆயுதமாக நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நம் நாடு தடுப்பூசி போடுவதில் 100 கோடி என்ற பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

இதனைக் குறிப்பிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா அபார சாதனை படைத்துள்ளது.தங்களது இடையறா முயற்சிகளால் இதனை நிகழச்செய்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…