சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது சபரிமலை விவகாரம். பெண் சமத்துவத்துக்கும், பாரம்பரிய சம்பிரதாயத்துக்கும் இடையில் மூண்டிருக்கும் பனிப்போர் இது! என்கிறார்கள். இருக்கட்டும், ஆனால் நடக்கும் சில கொடுமைகள் சிலவற்றைப் பார்க்கும் போது இந்து மத நம்பிக்கைக்கு நேர்ந்திருக்கும் ‘அக்னி பிரவேச காலம்’ இது என்றும் அங்கலாய்ப்புகள் வெடிக்கத்தான் செய்கின்றன. 

இந்நிலையில்  இன்று காலையில் இருந்து வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. அது, சபரிமலை செல்லும் பக்தர்கள் உடுத்தும் கறுப்பு உடையில், ஐயப்ப மாலைகளை அணிந்து கொண்டு, நெற்றியில்  பட்டை மிளிர ஒரு பெண் அமர்ந்திருக்கிறார். இது வரையில் ஓ.கே. ஆனால் அவர் அணிந்திருக்கும் வேஷ்டி தொடை தாண்டி ஏறியிருக்கிறது. இடது காலில் கிட்டத்தட்ட முழு தொடையுமே எக்ஸ்போஸ் ஆகியிருக்கிறது. அந்தப் பெண் தன்னைத் தானே எடுத்துக் கொண்ட பக்கா செல்பி இது என்பதும் போட்டோவின் தோற்றத்தில் புலனாகிறது. 

முழு ஒரிஜினல் போட்டோ இதைவிட கிளாமராக இருந்திருக்க வேண்டும், பரவ துவங்கியதில் சிலர் அபாய கிளாமர் விஷயங்களை கிராப் செய்து கட் பண்ணிவிட்டு பரப்புதலை தொடர்கிறார்கள் என்பது புலனாகிறது. ‘ஆன்மிகத்தில் பெண் சமத்துவம்’ எனும் கோரிக்கைக்கு எதிரான சம்மட்டியடியாக இந்த போட்டோவை முன்னிலைப்படுத்துகின்றனர் தீர்ப்பை எதிர்க்கும் நபர்கள். நடைதிறந்த இரண்டாவது நாளே இந்த கூத்தென்றால் இன்னும் காலம் போகப்போக என்னனென்ன பிரச்னைகளும், அசிங்கங்களும் வந்து சேரும் என்பதை யோசிக்க வேண்டும்! என்று புலம்புகின்றனர் தேவசம்போர்டு உறுப்பினர்களும், மன்னர் குடும்பத்தினரும்.  

இது ஒரு புறமிருக்க, அந்தப் போட்டோவில் இருக்கும் பெண்ணை பற்றிய தகவல்களை ஆராய்ந்தோர், அவர் பெயர் ரெபானா ஃபாத்திமா. இவர் Kiss of Love எனும் பிரச்சாரத்தை ஆரம்பித்து, அதில் தீவிரமாக இயங்கி கேரளத்தை கலக்கியவர் என்றும், இன்று சபரிமலைக்கு சென்றிருக்கும் ஆந்திர பெண் பத்திரிக்கையாளரான கவிதாவோடு இவரும் சென்றிருக்கிறார்! என்றெல்லாம் சென்சிடீவாக பரப்ப, பதற்றம் பற்றி எரிய துவங்கியுள்ளது. அந்த பெண் பற்றிய தகவல்கள் உண்மையா இல்லையா என்பதெல்லாம் வேறு கதை. ஆனால் அந்த போட்டோ சொல்லும் தகவல்கள் புனிதமானதாக இல்லை என்கின்றனர் எல்லா மதத்தின் பிரதிதிகளும்.  

ஐயப்பனை ஃபாத்திமா வணங்குவதில் தவறில்லை, வருஷா வருஷம் ஐயப்பனுக்கு அணிகள் செல்கையில் இஸ்லாமியர் சார்பாக மரியாதை செலுத்தும் வைபவம் காலங்காலமாக நடக்கிறது. ஆனால் சந்நியாசியான அவன் சந்நிதிக்கு செல்வேன், ஐயப்ப வேஷ்டியை தொடைகள் தெரிய தூக்கி கட்டி செல்ஃபி எடுத்து உலகுக்கே பரப்புவேன், ஐயப்ப பக்தர்! எனும் அடையாளத்துக்கு செக்ஸி சாயம் பூசுவேன்! என்பதை எப்படி ஏற்பது? என்கிறார்கள் சபரிமலை ஆலய நிர்வாகத்தை சார்ந்தோர். யோசிங்க பாஸ்!