Asianet News TamilAsianet News Tamil

பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. ஏப்ரல் 5 வரை நடை திறந்திருக்கும்.

Sabarimala temple to open today for Panguni
Author
First Published Mar 26, 2023, 10:11 AM IST

பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஞாயிறு மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த் நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 14ஆம் தேதி திறக்கப்பட்டது. பின் 19ஆம் தேதி நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 9.45 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியேற்றி வைத்து பத்து நாள் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜையாக உத்சவ பலியும் நடைபெற உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios