சபரிமலையில் இன்று நுழைய முயன்ற இரு கலகக் கண்மணிகள் ரெஹானா பாத்திமா, மற்றும் கவிதா  தொடர்பான செய்திகள் தொடர்ந்து தீப்பிடித்து வருகின்றன. இன்று காலை ரெஹானா பாத்திமாவின் வீடு பக்தர்களால் சூரையாடப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் கவிதா வேலை செய்யும் மோஜோ டி.வி. நிறுவனம் சில நபர்களால் முற்றுகைக்கு ஆளானது. 

ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது கவிதா வேலை செய்து வந்த மோஜோ ட்.வி.யின் அலுவலகம். இங்கு சில நிமிடங்களுக்கு முன் வந்த சில ஐயப்ப பக்தர்கள் கவிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி கையிலிருந்த பொருட்களை டி.வி. அலுவலத்துக்குள் எறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அத்தோடு  நில்லாமல் அலுவலகத்தில் வேலைசெய்துகொண்டிருந்த பணியாளர்களை வேலை செய்யவிடாமல் முற்றுகையிட்டனர். ரெஹானா  பாத்திமாவின் வீடு தாக்கப்பட்டதற்கு அவரது மதமும், ரெஹாவின் ஓபன் டைப் செயல்பாடுகளும் காரணமாகக் கூறப்பட்டது.  

இன்னொரு பக்கம் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ‘மோஜோ’ டி.வி. நிருபர் கவிதா, ‘சூழ்நிலைகள் சகஜநிலைக்கு வரும்போது மீண்டும் சபரிமலைக்கு வந்தே தீருவேன்’ என்று பேட்டி அளித்ததே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.