Asianet News TamilAsianet News Tamil

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது... தூக்கில் தொங்கிய பெண்ணால் பரபரப்பு!

சபரிமலை கோயில் தீர்ப்புக்கு எதிராக கேரள முழுவதும் விதவிதமான போராட்டங்கள் வெடித்துக்கிளம்பும் நிலையில் இன்று காலை ஒரு பெண் மரக்கிளையில் தூக்கில் தொங்க முயன்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

Sabarimala Temple... Supreme Court verdict...Kerala woman suicide attempt
Author
Kerala, First Published Oct 16, 2018, 5:06 PM IST

சபரிமலை கோயில் தீர்ப்புக்கு எதிராக கேரள முழுவதும் விதவிதமான போராட்டங்கள் வெடித்துக்கிளம்பும் நிலையில் இன்று காலை ஒரு பெண் மரக்கிளையில் தூக்கில் தொங்க முயன்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார். Sabarimala Temple... Supreme Court verdict...Kerala woman suicide attempt

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இப்பெண் மரத்தில் தூக்கில் தொங்குவதற்கான முயற்சியில் இருந்தபோது  தற்செயலாக பார்த்த பொதுமக்கள் அருகிலிருந்த போலீஸாரிடம் தெரிவிக்க இரு தரப்பினரும் சேர்ந்து அப்பெண்ணைக் காப்பாற்றினர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.  Sabarimala Temple... Supreme Court verdict...Kerala woman suicide attempt

இதற்கிடையே  கேரளாவில் போராட்டங்களில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்களை சமரசப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக போராட்டத்தில் தீவிரம் காட்டும் அமைப்புகள், கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம் ஆகியோரை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்தது. இதில் பந்தளம் ராஜகுடும்பம் திருவாங்கூர் தேவசம் போர்டுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை. Sabarimala Temple... Supreme Court verdict...Kerala woman suicide attempt

ஆனால் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படமாட்டாது என்று முதல்வர் பிரனாயி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios