ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க முடியாது என சபரிமலை தலைமை தந்திரிகளும், பந்தள மகாராராஜா குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இது தொடர்பாக நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அய்யப்பன் கோவிலில் அனைவரும் வழிபடலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்த்து போராட்டங்களை நடத்திய நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்துவோம் என்றார்.

 

சட்டத்தை கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அதை வேடிக்கைப் பார்க்க மாட்டோம் என்றார். ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், கோயிலுக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப, இந்து அமைப்பினர் மற்றும் பெண்கள் கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து பம்பை மற்றும் நிலக்கல்லில் போலீஸ் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டு பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஐயப்பன் கோவிலுக்கு வரும் வழியில் போலீஸ் பாதுகாப்பு இல்லாத இடங்களில் பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்து அமைப்பினரின் தாக்குதலையும் மீறி வரும் பெண்களைக் குண்டர்களிடம் இருந்து பாதுகாத்து பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதித்தனர்.  இன்று மாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்க இருக்கும் நிலையில் இந்த பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18 படியேறி வழிபாடு நடத்துவார்கள்.

ஆந்திராவில் இருந்து வந்த மாதவி என்ற 40 வயது பெண் பல்வேறு தடைகளையும், தாக்குதலையும் மீறி ஐயப்பன் கோயிலுக்குள் வந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது மாதவி சென்ற முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார்.